4.பெருவாழ்வு (பகுதி 1)

வணக்கம் நண்பர்களே........

       இந்த பதிவில் எனக்கு நம்பிக்கை அளித்த ஓர் அற்புத புத்தகத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.நான் ராபின் சர்மாவின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.அவரும் ஒரு சாதாரண  மனிதன் தான்.இவருடைய அனைத்து புத்தகங்களும் அருமையானவை.அதில்                            " பெருவாழ்வு " என்னும் புத்தகத்தை ஒருதொடராக உங்களுக்குத் தரப்போகிறேன்.
பெருவாழ்வு வாழ உங்களை அழைக்கிறேன்...........


சாதிக்க வேண்டும் என்னும் ஆசையுடன் தான் நீங்கள் இங்கு வந்திருப்பீர்கள்.உங்கள் ஆசைக்கு இணங்க ராபின் சர்மாவின் "பெருவாழ்வு " புத்தகம் தொடர் எழுதப்படுகிறது.இதில் பெரும்பாலும் ராபின் சர்மாவின் அற்புதமான வார்த்தைகள் இடம்பெறும்.அது ஒவ்வொன்றும் மணிமணியானவை.எனவே உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை ஒரு நோட்புக்கில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

இனி பெருவாழ்வு உங்களுக்காக .....

இந்த தொடரை என் ஆசானாகிய ராபின் சர்மாவுக்கு சமர்பிக்கிறேன்.


"  ராபின் சர்மாவின் முன்னுரை

"இந்த புரட்சிகரமான நூல் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும்"

      நம்  அனைவருக்கும் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கான உள்ளுறை சக்தி இருக்கிறது.நம் அனைவருக்குமே பெரும் சாதனைகள் புரிய,மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை வாழ மற்றும் பரிசுத்த ஆனந்தம் உணர்ந்திட ஆற்றல் உள்ளது.நம்மில் சிலருக்கு ஆழத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் இச்சக்தி தட்டி எழுப்பி பரிச்சித்து பார்ப்பதற்கென காத்துக்கொண்டிருக்கிறது.மிக மேன்மையான தேடல் என்பது இந்த சுய நிபுணத்துவம் மற்றும் வாழ்க்கையில் சிறப்பெய்தல் எனும் தீயை பற்ற வைப்பதே ஆகும்.இதை செய்வதற்குத் தேவை ஒரு கருவி.அதற்கு இந்நூல் மட்டுமே போதுமானது.

இமயமலைப் பாதையில் ஒரு துறவியை சந்திக்கும்  களைப்படைந்த பயணியைப் பற்றிய கதை ஒன்று உண்டு.பயணி தான் சென்று அடைய வேண்டிய  மலை உச்சியினை அடைவதற்கான பாதை எதுவென்று துறவியைக் கேட்கிறான்.ஒரு கண  யோசனைக்குப் பிறகு "நீ எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் மலை உச்சியை நோக்கி இருக்குமாறு உறுதி செய்ய,நீ அங்கே சென்று அடைவாய் " என்கிறார் துறவி.

           உங்களின் ஒவ்வொரு சிந்தனையும் ஒவ்வொரு செயலும் உங்கள் வாழ்க்கையின் இறுதி குறிக்கோள் நோக்கி இருக்கையில் நீங்கள் ஒரு தடுக்க முடியாத சக்தியாவீர்கள்.அளவிட முடியாத வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு உறுதியாகும்.உங்கள் மனம்,உடல்,குணநலன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளும்போது உங்கள் வாழ்க்கையானது,நீங்கள் நினைத்து பார்த்திராதத ஆற்றல் வாய்ந்த பரிமாணங்களை எடுக்கும்.உங்கள் வாழ்க்கையில் அதிக உயிரோட்டம் சேர்த்திட தேவையானவற்றையெல்லாம் இந்நூல் வழங்கும்.

             பெருவாழ்வின் முதல் பகுதியானது சுயநிபுணத்துவம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தேவையான அனைத்து வழிகாட்டும் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது.பகுதி இரண்டு உங்கள் வாழ்க்கை ஒரு மந்திரமயமான கனவாக உருவெடுக்க உதவும் 2௦௦ தலைச்சிறந்த இரகசியங்களை வெளிப்படுத்துகிறது.பகுதி மூன்று முழுமையான வாழ்க்கைக்கான புரட்சிகரமான 3௦ நாள் திட்டத்தை உள்ளடக்கியது.இந்நூல் உங்களுக்காக அற்புதங்களை நிகழ்த்தும்.ஒரு முழுமையான வாழ்க்கை உங்களுக்காகவே காத்திருக்கிறது.

ராபின் சர்மா LL.B,LL.M      "

 என்ன நண்பர்களே .......

ராபின் சர்மாவின் முன்னுரையைப் படித்தீர்களா?இதன் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும்.அடுத்து என்ன செய்வதென்று கேட்கிறீர்களா?

உடனே பெருவாழ்வு பகுதி 2 க்கு செல்லுங்கள்.உங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.அடுத்த பயனுள்ள பதிவில் சந்திப்போம். நண்பர்களே உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்துப்பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.குறை,நிறைகளை கண்டிப்பாக கூறுங்கள்.திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

 -நன்றி

வாழ்க வளமுடன்  

இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....